Sunday, July 5, 2009

இயற்கை வேளாண்மை என்பது என்ன? அது லாபகரமானதா? சாத்தியமானதா?

இயற்கை வேளாண்மை பற்றி தெறிந்துகொள்வது முக்கியமானது. 40 வருடங்களுக்கு முன்னால் அறிமுகம் செய்யப்பட்ட பசுமை புரட்சி மூலம் நமது வேளாண்முறையில் பூச்சிக்கொல்லி மருந்து, உரம், களைக்கொல்லி ஆகியவற்றால் நாம் உண்ணும் உணவு, மண், நீர்நிலைகள் ஆகியற்றிலும் விஷம் கலந்துவிட்டது.இதனால் புற்று நோய், இதய நோய்கள், நீரிழிவு நோய் மற்றும் பல சொல்லமுடியாத நோய்களுக்கு உள்ளகி இருக்கிறோம். உதாரணமாக சொல்வதென்றால் சிகரெட்டைவிட நாம் உண்ணும் காய்கறிகள் ஆபத்தானவை.
இதனை தாமதமாக் தெறிந்துகொண்ட மேற்கத்திய நாடுகள் 1970 லேயே டிடிடி போன்ற பூச்சிக்கொல்லிகளுக்கு தடை விதித்துவிட்டது. ஆனால் இந்தியர்களுக்கு இப்போதுதான் புத்தி வந்திருக்கிறது. நம்மக்களும் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டத்தொடங்கியிருங்கின்றனர். இம்முறையில் விளைந்த காய்கறிகள், பழங்கள், அரிசி, தேங்காய் போன்றவற்றை அதிக விலைகொடுத்து வாங்கவும் தயாராக இருக்கின்றனர். இதற்கான விற்பனை அங்காடிகள் சென்னை கோவை திருச்சி போன்ற பெரு நகரங்களில் திறக்கப்பட்டிருக்கின்றன.பொதுமக்கள் மத்தியில் இயற்கை வேளாண்மை பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டிருந்தாலும் விவசாயிகள் மத்தியில் இயற்கை வேளாண்மை பிரபளம் அடையவில்லை, காரணம் விளைச்சல் குறைந்துவிடுமோ என்ற பயமும் அதற்கான தொழில் நுட்பம் இல்லாததும்தான். என‌க்கு தெறிந்து பலபேர் வழக்கத்தை விடவும் இயற்கை முறையில் அதிகமான விளைச்சலை பெற்றுள்ளனர். மண்ணை வளப்படுத்த பஞ்சகாவியா, வளர்ச்சியூக்கியாக அமுத கரைசல், ஆட்டூட்டம், மாட்டூட்டம், பூச்சிகளை விரட்ட அக்னி அஸ்திரம், விளக்கு பொரிகள் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.
நமது வாசகர்களில் யாரேனும் இயற்கை வேளாண்மை செய்ய முன்வந்தால் தமிழக அளவிலும் இந்திய அளவிலும் இயற்கை வேளாண்மையில் சாதனை செய்தவர்களை நேரடியாக சந்திக்க ஏற்பாடு செய்துதரப்படும்.

மரம் வளர்ப்பு லாபகரமான தொழிலா

இன்றைய‌ நில‌மைக்கு ம‌ர‌ம் வ‌ள‌ர்ப்பும் லாப‌க‌ர‌மான‌துதான் மிக‌க்குறைந்த‌ ஆட்தேவை,இடுபொருள் செல‌வு, ப‌ராம‌ரிப்பு செல‌வு அதிக‌ லாப‌ம் இத‌ற்காக‌வே ம‌ர‌ம் வ‌ள‌ர்ப்பும் ப‌ரிந்துரை செய்ய‌ப்ப‌டுகிறது.
மரம் வளர்ப்பை பொருத்தவரை குமிழ் தேக்கு, முள்ளில்லா மூங்கில்,மலைவேம்பு,சந்தனம் ஆகியவை சிறப்பானதாகும்.குமிழ் மரம்
தேக்கு வகையைச் சேர்ந்தது மிக வேகமாக வளரக்கூடியது. எல்லா மண்வகைக்கும் ஏற்றது ஒரு மரமானது 7 1/2 ஆண்டுகளில் 3/4 டன் முதல் 1 டன் வரை மகசூல் தரக்கூடியது ஒரு டன் ரூ 7,500 முதல் 8,000 வரை விலைபோகும் ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 1200 மரங்கள் வரை நடவு செய்யலாம் என்றால் லாபத்தை கணக்கிட்டுக் கொள்ளவும். தென்னந்தோப்பாக இருந்தால் வேலியோரங்களிலும் பயிரிடலாம், இதன்மூலம் ஏற்படும் லாப இழப்பையும் ஈடு செய்யலாம்.
மூங்கில் ; உலகின் அதிவேகமாக வளரும் தாவரவகையாகும் மூங்கிள் ஒரு நாளைக்கு 1 முதல் 1 1/2 அடி வரை வளரக்கூடியது இதன் விலை டன் ஒன்றுக்கு 3000 முதல் 3500 டன் வரை விலைபோகிறது. ஒரு ஏக்கரில் பயிரிட்டால் 4ம் ஆண்டுமுதல் வடருடந்தோரும் 3 டன் அறுவடை செய்யமுடியும்
தேக்கோ மூங்கிலோ வருடந்தோரும் பலன் தருவதில்லை இதன் ஆயுல் 75 ஆண்டுகளாகும்.

சந்தனம்: சந்தன மரத்தை இப்போது தனியாரும் வளர்க்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தங்களின் ம‌ண் தன்மைக்கு ஏற்ற ர‌கத்தை தேர்வு செய்வதுமூலம் 15 வருடங்களில் ரூ 5 கோடி வருமானம் பெறமுடியும்

நமது வசகர்கள் யாரேனும் மரப்பயிர் செய்ய முன்வந்தால், பயிர்செய்து பலன்பெற்றவர்களின் முகவரியும் செல் நம்பரும் தரப்படும்.

தென்னைய வெச்சாலும் கண்ணீர்தானா?

இன்னிக்கு இருக்கிற தேங்காய் விலை நிலமை உங்களை இப்டி கேட்க வச்சிருக்குன்னு நெனைக்கிறேன். ஒரு விலை ஒப்பீட்டுக்காக பார்த்தோம்னா 20 வருஷசத்துக்கு முன்னாடி ஒரு லிட்டர் டீசல் விலை ரூ 3.50 அன்னிக்கு ஒரு தேங்காயோட விலை ரூ 5, ஆனா இன்னிக்கு டீசல் விலை 36 தேங்காய் விலையோ ரூ 3, இதுக்கெல்லாம் காரணம் அதிகமான் உற்பத்திதான், ஆள் பற்றாக்குறையும் ஒரு முக்கியமான் காரணம். தற்சமயம் ஏற்பட்டிருக்கிற விலை வீழ்ச்சிக்கு காரணம் வெளி நாடுகள்ளேருந்து கொப்பரை இற‌க்குமதி ஆகுரதுதான் (மன்மோகன் சிங்குக்கே வெளிச்சம்).
இறக்குமதி தேங்காய் கொப்பரை எண்னெய்த்தேவையத்தான் பூர்த்தி செய்யுமே தவிர சாப்பாட்டுக்கான தேங்காய நாமதான் பூர்த்தி செஞ்சாகனும், இன்னிக்கும் கோயம்பேடு மர்க்கெட்ல தேங்காய் விலை ரூ 8 யிலிருந்து 11 வரை இருக்கும் ஆக 4, 5 விவசாய உற்பத்தியாளர்கள் ஒன்னா சேர்ந்து மாதம் 25000 லிருந்து 30000 வரை தேங்கய நேரடியா கொண்டுபோய் விற்பனைசெய்வதால் குரைந்தபட்சம் ரூ 4 முதல் ரூ 6 வரை கிடைக்கும். முயற்சி செஞ்சி பாக்களாமே. தொழிலுக்கு தொழிலும் ஆச்சு தேங்காய்க்கு விலையும் ஆச்சு..